

என்னை பொறுத்தவரை தோனி கேப்டன்சியின் கீழ்தன் யுவராஜ் சிங் நன்றாக ஆடினார் என்று ஆஷிஷ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார்.
தோனியின் கேப்டன்சியின் கீழ் தனக்கு பெரிய ஆதரவை அவர் அளிக்கவில்லை என்று யுவராஜ் சிங் குற்றம் சுமத்தினாலும் தோனி கேப்டன்சியில்தான் யுவராஜ் சிங் பிரமாதமாக ஆடியதாக ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார். கங்குலிதான் தனக்கு பெரிய அளவில் கேப்டனாக ஆதரவு அளித்ததாக யுவராஜ் சிங் ஏற்கெனவே கூறியிருந்தார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்தும் கிரிக்கெட் கனெக்ட் நிகழ்ச்சியில் ஆஷிஷ் நெஹ்ரா கூறியதாவது:
யுவராஜ் சிங், தோனி கேப்டன்சியில் பிரமாதமாக ஆடினார். நான் யுவராஜ் கிரிக்கெட் வாழ்க்கையைப் பார்த்தவரை 2007 2008-ல் அவர் பேட் செய்த விதம் தொடங்கி 2011இல் தோனி கேப்டன்சியில்தான் அவர் பிரமாதமாக ஆடினார். 2011-ல் கேன்சரிலிருந்து மீண்டு வ்ந்த அவர் எப்படி தோனியின் கீழ் வெளுத்துக் கட்டினார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
ஒவ்வொரு வீரருக்க்கும் அவரவர் கேப்டன் பற்றிய தெரிவு இருக்கும், அதுவும் 16 ஆண்டுகள் ஆடிய யுவராஜ்தான் அதைக்கூற முடியும் என்றாலும் என்னை பொறுத்தவரையில் தோனி கேப்டன்சியிலும் அவர் பிரமாதமாக ஆடினார் என்றே கூறுவேன்” என்றார் ஆஷிஷ் நெஹ்ரா.
2011 உலகக் கோப்பையின் போது யுவராஜ் சிங் கேன்சர் நோயுடன் போராடினார். 2011 உலகக்கோப்பையில் பிரமாதமாக ஆடி தொடர் நாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.
ஆஷிஷ் நெஹ்ரா கூறுவதில் உண்மை இருக்கிறது ஏனெனில் 104 ஒருநாள் போட்டிகளில் தோனியின் தலைமையின் கீழ் யுவராஜ் சிங் 3,077 ரன்களைக் குவித்தார், கங்குலியின் கீழ் 110 ஒருநாள் போட்டிகளில் 2,640 ரன்களையே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.