

இன்ஸ்டாகிராமில் யுவராஜ் சிங் பகிர்ந்த வீடியோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அதாவது சாலையில் கதியற்று கிடப்பவர்களுக்கும் பிச்சைக்காரர்களுக்கும் லாக்-டவுன் காலத்தில் உதவுவதன் அவசியத்தை உணர்ந்த போலீஸ் தன் உணவை பகிர்ந்தளித்த காட்சியை யுவராஜ் சிங் தன் இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவுடன், “கடினமான இந்தக் காலங்களில் இவர்கள் காட்டும் மனிதாபிமானம் இதயத்தைக் கனியச் செய்கிறது. தங்கள் உணவை பகிர்ந்த போலீஸார் என்று ட்ரெண்டிங் ஹாஷ்டேக்குகளான "#StayHomeStaySafe" "#BeKind" என்பதையும் சேர்த்துள்ளார்.
3 நிமிடங்கள் 30 விநாடிகள் ஓடும் இந்த வீடியோவில் போலீஸ் ஒருவர் சாலையில் இருந்த ஏழை ஒருவருக்குத் தன் உணவை அளிக்கிறார்.
கிரிக்கெட் வீரர்கள் பலரும் முன்னாள் ‘கேப்டன்’ கங்குலி முன்னிலை வகிக்க லாக்-டவுன் பாதிப்பினால் கஷ்டப்படுபவர்களுக்கு உதவி வருகின்றனர். ஷாபாஸ் நதீம் என்ற ஜார்கண்ட் வீரர் தேவையுள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகிறார்.