மகளிர் டிரிப்பிள் ஜம்ப்பில் யூலிமர் ரோஜாஸ் சாதனை

மகளிர் டிரிப்பிள் ஜம்ப்பில் யூலிமர் ரோஜாஸ் சாதனை
Updated on
1 min read

மாட்ரிட் உள்ளரங்க தடகள போட்டியில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் டிரிப்பிள் ஜம்ப்பில் உலக சாதனை படைத்தார்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் மகளிருக்கான உள்ளரங்க தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் டிரிப்பிள் ஜம்ப்பில் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த யூலிமர் ரோஜாஸ் 15.43 மீட்டர் நீளம் தாண்டி புதிய உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் கடந்த 2004-ம் ஆண்டு மார்ச் மாதம் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவின் டட்யானா லெபடேவா 15.36 மீட்டர் நீளம் தாண்டியதே சாதனையாக இருந்தது. இதனை தகர்த்து தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார் 24 வயதான யூலிமர் ரோஜாஸ்.- ஏஎப்பி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in