Published : 13 Feb 2020 05:55 PM
Last Updated : 13 Feb 2020 05:55 PM

11 போட்டிகள் கொண்ட லெஜண்ட்ஸ் டி20 கிரிக்கெட்: இந்திய லெஜண்ட் அணிக்கு சச்சின் கேப்டன், மே.இ.தீவுகளுக்கு லாரா - போட்டி அட்டவணை

இந்தத் தொடருக்கான ஜெர்சி அறிமுகத்தின் போது சச்சின் டெண்டுல்கர்.

சாலைப்பாதுகாப்பு உலக சீரிஸ் தொடருக்காக இந்தியா, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் அணிகள் 11 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகின்றன.

இதில் இந்திய லெஜண்ட்ஸ் அணிக்குக் கேப்டன் சச்சின் டெண்டுல்கர், மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் அணிக்கு லாரா கேப்டன், இவர்கள் இருவரும் மோதும் தொடரின் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 7 முதல் நடைபெறுகிறது.

மொத்தம் 11 டி20 போட்டிகளில் வான்கடேயில் 2, புனேயில் 4, நவி மும்பை பாட்டீல் ஸ்டேடியத்தில் 4, மார்ச் 22-ல் பிரபர்ன் ஸ்டேடியத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.

அனைத்துப் போட்டிகளும் இந்திய நேரப்படி மாலை 7 மணிக்குத் தொடங்கும் இதன் நேரலை கலர்ஸ் சினிபிளெக்ஸ் மற்றும் கலர்ஸ் கன்னட சினிமா ஆகியவற்றில் ஒளிபரப்பப்படுகிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா, மே.இ.தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகளிலிருந்து முன்னாள் வீரர்கள் பலர் இந்தத் தொடரை அலங்கரிக்கவுள்ளனர்

இதில், சச்சின், சேவாக், ஜாகீர் கான், யுவராஜ் சிங், லாரா, சந்தர்பால், பிரெட்லீ, பிராட் ஹாட்ஜ், ஜாண்ட்டி ரோட்ஸ், முரளிதரன், தில்ஷான், அஜந்தா மெண்டிஸ் உட்பட பல நட்சத்திர முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

போட்டி அட்டவணை (அனைத்துப் போட்டிகளும் மாலை மணி 7 மணிக்குத் தொடங்கும்)

மார்ச் 7 : இந்திய லெஜண்ட்ஸ் - மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் (மும்பை, வான்கெடே)

மார்ச் 8: ஆஸி. லெஜண்ட் - இலங்கை லெஜண்ட்ஸ் (வான்கெடே)

மார்ச் 10: இந்தியா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் (பாட்டீல் ஸ்டேடியம், நவி மும்பை)

மார்ச் 11: மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் ( பாட்டீல் ஸ்டேடியம்)

மார்ச் 13: தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் ( பாட்டீல் ஸ்டேடியம்)

மார்ச் 14: இந்தியா லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் ( புனே)

மார்ச் 16: ஆஸி. லெஜண்ட்ஸ் - மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் (புனே)

மார்ச் 17: மே.இ.தீவுகள் லெஜண்ட்ஸ் - இலங்கை லெஜண்ட்ஸ் (புனே)

மார்ச் 19: ஆஸி. லெஜண்ட்ஸ் - தென் ஆப்பிரிக்கா லெஜண்ட்ஸ் (நவி மும்பை)

மார்ச் 20: இந்தியா லெஜண்ட்ஸ் - ஆஸி. லெஜண்ட்ஸ் (புனே)

மார்ச் 22: இறுதிப் போட்டி - பிரபர்ன் ஸ்டேடியம், மும்பை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x