யுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாச வாழ்த்து

யுவராஜ் சிங் பிறந்த நாள்: சேவாக் கூறிய வித்தியாச வாழ்த்து
Updated on
1 min read

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்த நாளுக்கு சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் தனது 38-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடுகிறார். இந்நிலையில் யுவராஜ் சிங்குக்கு அவரது ரசிகர்கள் மற்றும் பிற கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் தனது வழக்கமான நகைச்சுவையில் யுவராஜ் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில், “A B C D E F G H I J K L M N O P Q R S T W X Y Z.. நீங்கள் ஏராளமான ஒளிக்கற்றைகளைப் பார்க்கலாம். ஆனால் ’UV ’என்பது அரிதான கதிராகும். பிறந்த நாள் வாழ்த்துகள் யுவி” என்று பதிவிட்டுள்ளார்.

2007 ஆம் ஆண்டு டி 20 போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் போர்டின்பந்தில் யுவராஜ் ஆறு பந்துகளில் விளாசிய ஆறு சிக்ஸர்களை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த வகையில் ஸ்டுவர்ட் போர்டும் யுவராஜ் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், சச்சின் டெண்டுல்கர், லஷ்மன், கோலி, ரெய்னா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் யுவராஜ் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in