

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் சென்னையின் எப்சி - ஹைதராபாத் எப்சி மோதுகின்றன.
சென்னை அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை கூட பெறவில்லை. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திலும் இருக்கும் சென்னை அணி இதுவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. முன்கள வீரரான ஆந்த்ரே ஸ்கெம்ப்ரி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாததால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக லிதுவேனியாவைச் சேர்ந்த நெரிஜஸ் வால்ஸ்கிஸ் சேர்க்கப்படக்கூடும்.
ஹைதராபாத் 4 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியுடன் 9-வது இடத்தில் உள்ளது. சென்னை அணியின் தடுமாற்றத்தை அந்த அணி சரியாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.