போட்டியின்போது மயங்கி விழுந்த குத்துச்சண்டை வீரர் மரணம்

போட்டியின்போது மயங்கி விழுந்த குத்துச்சண்டை வீரர் மரணம்
Updated on
1 min read

வாஷிங்டன்

போட்டியின்போது மயங்கி விழுந்து கோமாவில் இருந்த பிரபல அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பேட்ரிக் டே மரணமடைந்தார்.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் யு.எஸ்.பி.ஏ குத்துச் சண்டை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டியின் கடந்த சனிக்கிழமை நியூயார்க்கை சேர்ந்த முன்னாள் கோல்டன் கிள வுஸ் சாம்பியன் பேட்ரிக் டேவும், ஒஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான கான் வெல்லும் மோதினர்.

போட்டியின் 10 -வது ரவுண் டில், இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். அப்போது திடீரென பேட்ரிக் டே மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பேட்ரிக் மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. நான்கு நாட்களாக கோமா வில் இருந்த பேட்ரிக் டே நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கான்வெல், கூறும்போது, ‘பேட் ரிக் டேவை வெற்றி கொள்வது மட்டுமே என் நோக்கமாக இருந் ததே தவிர அவரை காயப்படுத்து வதோ, தாக்குவதோ என் நோக்க மில்லை. குத்துச் சண்டை போட்டி களில் இருந்து விலக முடிவு செய் துள்ளேன்’ என்றார்.

- பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in