

அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசி செயற்குழு கூட்டத்திற்கு அதன் முதல் சேர்மனாக சீனிவாசன் தலைமை வகிப்பதை அனுமதிக்க வேண்டாம் என ஐசிசி தலைவர் ஆலன் ஐசக்கிற்கு பிஹார் கிரிக்கெட் சங்க செயலர் ஆதித்ய வர்மா கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ஐசிசியையும் கடுமையாகச் சாடியுள்ள வர்மா, மேலும் கூறியிருப்பதாவது: ஐபிஎல் முறைகேடு விவகாரத்தில் வாயை மூடிக்கொண்டு மெளன மாக இருக்கிறது ஐசிசி. ஐபிஎல் முறைகேடு தொடர்பான வழக்கில் இறுதித்தீர்ப்பு இன்னும் வெளியாக வில்லை. அந்தத் தீர்ப்பு வெளியாகும் வரை ஐசிசி செயற் குழுவில் சீனிவாசன் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் விவகாரத்தில் விசார ணை நடத்தாமல் அமைதி காக்கும் ஐசிசியின் செயல்பாடு குறித்து கேள்வியெழுப்பியுள்ள வர்மா, “ஐசிசி விதிமுறைப்படி ஏதாவது ஒரு வீரர் சட்டவிரோதமான செயலில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்துவது ஐசிசியின் கடமையாகும். ஆனால் ஐசிசி இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இப்போது இந்தியா சிமென்ட் கிரிக்கெட்டாக மாறிவிட்டதா? தவறு செய்தவர்களுக்கு எதிராக ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிஹார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் மீண்டுமொரு முறை ஐசிசியை கேட்டுக் கொள்கிறேன். இந்திய சட்டத் திற்கும், இந்தியாவின் தலையாய நீதிமன்றமான உச்சநீதிமன் றத்திற்கும் ஐசிசி மதிப்பளிக்க வேண்டும். ஐபிஎல் முறைகேடு வழக்கில் இறுதித்தீர்ப்பு வரும் வரை ஐசிசி செயற்குழுவில் சீனிவாசன் பங்கேற்க அனுமதிக்கக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.