

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த நியூஸிலாந்து ஆல்ரவுண்டரான ஜிம்மி நீஷம், ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள் ளனர்.
அவர்களுக்குப் பதிலாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் அசார் மெஹ்மூத், தென் ஆப்பிரிக்க வீரர் ஜோஹன் போத்தா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் அசார் மெஹ்மூத், சுர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். ஜோஹன் போத்தா ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கில் ஆடி வருகிறார்.
ஐபிஎல் போட்டி வரும் 8-ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும், நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும் மோதுகின்றன.