

பிப்.8-ஆம் தேதி நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் கலந்து கொண்டது தவறு என்று சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
பிப்.8-ஆம் தேதி பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொண்டதையடுத்து உச்ச நீதிமன்றம் தனது கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தது. மேலும், நீதிமன்ற அவமதிப்பாக இதனை ஏன் கருதக்கூடாது என்று வழக்கறிஞர் கபில் சிபலிடம் கேள்வியும் எழுப்பியிருந்தது.
தற்போது தனது செயலுக்காக வருந்தி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். அவரது மன்னிப்பை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மார்ச் 2ஆம் தேதி நடைபெறும் பிசிசிஐ ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் சீனிவாசன் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆனால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக அவர் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் வாக்களிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.