கால்பந்தில் மியான்மரை வீழ்த்தியது இந்திய அணி

கால்பந்தில் மியான்மரை வீழ்த்தியது இந்திய அணி
Updated on
1 min read

ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மியான்மரை வீழ்த்தியது.

யங்கூனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் ஷேத்ரி கோல் அடித்து அசத்தினார்.

இடது கார்னரில் இருந்து ஜிஜியிடம் இருந்த பந்தை பெற்ற சுனில் ஷேத்ரி கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3 புள்ளிகளை பெற்றது. ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது அடுத்த ஆட்டங்களில் கிர்கிஸ் தான், மக்காவு ஆகிய அணிகளுடன் மோத உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in