

காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி விலகியுள்ளார்.
பயிற்சியின் போது சவுத்தியின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. முன்னங்காலில் வலி இருந் ததால் அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. இதில் இடது கணுக்காலில் உள்ள தசை நாரில் திரிபு ஏற்பட்டுள்ளது தெரியவந் துள்ளது. இதையடுத்து சிகிச்சைக் காக அவர் உடனடியாக தாயகம் புறப்பட்டு செல்கிறார். இதனால் இந்திய டெஸ்ட் தொடரில் அவர் முழுமையாக பங்கேற்கமாட்டார் என நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் ஒருநாள் போட்டி தொடருக்கு முன்னதாக டிம் சவுத்தி உடல் தகுதியை பெறக் கூடும் என வாரியம் கருதுகிறது. 27 வயதான சவுத்தி அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அவர் இதுவரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளை யாடி 177 விக்கெட்கள் கைப்பற்றி யுள்ளார். இதற்கிடையே காயம் காரணமாக விலகி உள்ள டிம் சவுத்திக்கு பதிலாக மேட் ஹென்றி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹென்றி இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுத்தி விலகியது தொடர்பாக பயிற்சியாளர் மைக் ஹெஸன் கூறும்போது,
‘‘இந்தியத் தொடருக் காக சவுத்தி கடினமாக தயாராகி இருந்தார். தொடர் முழுவதும் அவர் விளையாட முடியாமல் போனது துரதிருஷ்டவசமானது. சவுத்தி 7-10 நாட்கள் வரை ஓய்வில் இருக்க வேண்டும்.
அதன் பின்னர் படிப்படியாக அவர் பயிற்சிகளை மேற்கொள் வார். சவுத்திக்கு பதிலாக சேர்க் கப்பட்டுள்ள மேட் ஹென்றி முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக எங்களுடன் இணைந்து விடுவார்’’ என்றார்.