

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகப் பொறுப்பேற்க, சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
அதேவேளையில், ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான விசாரணையில் தலையிடக் கூடாது என்று அவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக விசாரணை நடத்த, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முகுல் முத்கல் தலைமையில் குழு அமைத்தது உச்ச நீதிமன்றம்.
மேலும், இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை 4 மாத காலத்துக்குள் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைப்பதாக பிசிசிஐ தெரிவித்த யோசனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
உச்ச நீதிமன்றமே விசாரணைக் குழுவை அமைத்திருப்பது, சீனிவாசனுக்கு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், அவரை பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க அனுமதி அளித்திருப்பது அவருக்கு சற்றே நிம்மதி தரும் முடிவு எனத் தெரிகிறது.