ஹீனா சித்து ஏமாற்றம்

ஹீனா சித்து ஏமாற்றம்
Updated on
1 min read

ரியோ ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சித்து ஏமாற்றம் அளித்தார். தகுதி சுற்றில் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே இறுதிச் சுற்றை எட்ட முடியும் என்ற நிலையில் ஹீனா சித்து 576 புள்ளிகளுடன் 20-வது இடத்துக்கு பின்தங்கினார். ஏற்கெனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவிலும் ஹீனா சித்து தகுதி சுற்றோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் அட்டானு தாஸ்

ரியோ ஒலிம்பிக் ஆடவர் தனிநபர் வில்வித்தைப் போட்டியில் இந்தியாவின் அட்டானு தாஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அட்டானு தாஸ் 139-135 என்ற புள்ளிகள் கணக்கில் கியூபாவின் அட்ரியான் ஆண்டர்ஸை தோற்கடித்தார். இந்த ஆட்டத்தில் இருவருமே சிறப்பாக விளையாடினர். எனினும் அட்டானு தாஸ் துல்லியமாக அம்பை எய்ததன் விளைவாக 4 புள்ளிகள் வித்தியாசத்தில் அட்ரியானை தோற்கடித்தார். காலிறுதியில் அட்டானு தாஸ், தென் கொரியாவின் லீ ஷங்குடன் நாளை மோதுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in