

சிட்னி காயம் காரணமாக நியூஸிலாந் துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூ வேட் விலகி உள்ளார். இதனால் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் ஆரோன் பின்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸிலாந்துக்கு எதிராக ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்தி ரேலிய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந் தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 0-1 என பின்தங்கி உள்ளது. இந்நிலையில் 2-வது போட்டி நேப்பியரில் இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
ஏற்கெனவே ஸ்டீவ் ஸ்மித் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியதால் விக்கெட் கீப்பரான மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டி ருந்தார். எனினும் முதுகு வலி காரணமாக மேத்யூ வேட், முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்க வில்லை. தற்போது காயத்தில் இருந்து குணமடையாததால் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் அவர் விலகி உள்ளார்.
இதனால் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் ஆரோன் பின்ச் தலைமையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற் கிடையே இந்திய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக துபையில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் விதமாக முழு உடல் தகுதியை பெற்றுவிடுவேன் என மேத்யூ வேட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.