

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சென்னையின் எப்சி அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆகிறார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி.
ஹிந்தி நடிகர் அபிதாப் பச்சனும் இந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். ஐபிஎல் பாணியிலான இந்த கால்பந்து போட்டி அக்டோபர் 12-ம் தேதி தொடங்க இருக்கிறது. இதில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி ஆகியோரும் இதில் வெவ்வேறு அணிகளின் உரிமையாளராக உள்ளனர். இந்த வரிசையில் இப்போது தோனியும் இணைந்துள்ளார்.
தனது விளையாட்டு வாழ்க்கையின் முதல் கட்டத்தை கோல் கீப்பராக தொடங்கிய தோனி, பிறகு விக்கெட் கீப்பர் ஆனார். ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.