

இலங்கை - நியூஸிலாந்து அணிகள் இடையேயான 5-வது ஒருநாள் போட்டி இன்று மவுண்ட் மவுன் கானுவில் இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு நடை பெறுகிறது.
இந்த ஆட்டத்திலும் மெக்கலம் விளையாட மாட்டார் என நியூஸி. அணியின் பயிற்சியாளர் ஹெஸன் தெரிவித்துள்ளார். 2வது ஒருநாள் போட்டியின் போது மெக்கலத்துக்கு இடுப்பு வலி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.