

இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவர் சீனிவாசன் தன் பொறுப்புகளைச் சரிவர செயல்படுத்தவில்லை. எனவே, இந்திய கிரிக்கெட் அணிக்கு சஹாரா தொடர்ந்து ஸ்பான்சர் செய்யாது என சஹாரா குழுமங்களின் தலைவர் சுப்ரதா ராய் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: பிசிசிஐ-யுடன் நாங்கள் சிநேகபூர்வமான உறவு வைத்திருந்தோம். ஆனால், தற்போதைய தலைவர் சீனிவாசன், வேறு மனநிலையில் இருந்தார். அவருக்கு தன்னைப்பற்றிய தவறான கற்பிதம் அதிகமாக இருக்கிறது. எனவே, எங்களால் உறவைத் தொடர முடியவில்லை.
ஐ.பி.எல். சூதாட்டப் புகார் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி நிர்வாகத்தின் மீது உள்ளது. வேறு அணிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டிருந்தால், இந்நேரம் அந்த அணி நசுக்கப்பட்டிருக்கும். சென்னை அணிக்கு அது நேரவில்லை. இது போன்ற சூழலில், இந்திய கிரிக்கெட் வாரியத்துடனான உறவைத் தொடர விரும்பவில்லை என்றார் அவர்.