தற்போதைய இந்திய அணியின் பந்து வீச்சு உலகிலேயே மிகச் சிறந்தது: சமிந்தா வாஸ் கருத்து

தற்போதைய இந்திய அணியின் பந்து வீச்சு உலகிலேயே மிகச் சிறந்தது: சமிந்தா வாஸ் கருத்து
Updated on
1 min read

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் நெருங்கும் தருணத்தில் தற்போதைய இந்திய பந்து வீச்சு உலகிலேயே மிகவும் சிறந்த பந்து வீச்சு என்று இலங்கை முன்னாள் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மொகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அடங்கிய பந்து வீச்சு வரிசை தற்போது உலகில் மிகச்சிறந்ததாகும் என்கிறார் சமிந்தா வாஸ்.

“முதலில் முக்கியமானது உடற்தகுதி. இவர்கள் வலிமையாக உள்ளனர், வேகமாக வீசுகின்றனர். ஒவ்வொரு போட்டியிலிருந்தும் விரைவில் கற்றுக் கொண்டு மிகச்சீராக வீசி வருகின்றனர். உலகிலேயே இந்தப் பந்து வீச்சு வரிசைதான் மிகச்சிறந்தது. ஐபிஎல் மற்றும் பிற தொடர்களில் ஆடுவதன் மூலம் இந்தியாவிலிருந்து மேலும் வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள்.

ஜஸ்பிரித் பும்ரா குறைந்த அளவில் ஆடினாலும் பிரமாதமாக ஆடிவருகிறார். மலிங்கா, ஷேன் பாண்ட் ஆகியோர் பும்ராவுக்கு பெரிய அளவில் உதவி புரிகின்றனர் என்று நான் கருதுகிறேன்” என்றார் வாஸ்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in