

மகளிருக்கான வட்டு எறிதலில் பங்கேற்ற இந்திய வீராங்கனை சீமா அன்டில் பூனியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார். அவர் தகுதி சுற்றில் 57.58 மீட்டர் தூரம் எறிந்து 20-வது இடத்தை பிடித்தார்.
தங்கத்தை தவறவிட்ட சைமோன் பைல்ஸ்
ஒலிம்பிக்கில் மகளிர் ஜிம்னாஸ்டிக்கில் அமெரிக்காவின் 19 வயதான இளம் வீராங்கனை சைமோன் பைல்ஸ் அசத்தி வருகிறார். தனிநபர் பிரிவில் இரு தங்கம் வென்ற அவர் குழு பிரிவில் தங்கப் பதக்கம் கைப்பற்றினார். இந்நிலையில் நேற்று முன்தினம் சைமோன், பீம் பிரிவு இறுதிப் போட்டியில் பங்கேற்றார். இதில் 14.733 புள்ளிகள் பெற்ற அவரால் வெண்கலப் பதக்கமே கைப்பற்ற முடிந்தது. நெதர்லாந்தின் ஷானே விவெர்ஸ் 15.466 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கமும், மற்றொரு அமெரிக்க வீராங்கனையான லாரி ஹெர்னான்டஸ்15.333 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.
கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து சைமோன் பைல்ஸ் தான் பங்கேற்ற அனைத்து இறுதிப்போட்டிகளிலும் வெற்றி வாகை சூடிய நிலையில் தற்போது முதல்முறையாக முதலிடத்தை இழந்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் அவர் தனது கடைசி போட்டியாக புளோர் பிரிவில் தங்கம் வெல்லும் கனவுடன் களமிறங்குகிறார்.
இந்திய வீரர்கள் களத்தில் இன்று
மகளிருக்கான கோல்ப்
தகுதி சுற்று போட்டி
அதிதி அசோக்
நேரம்: மாலை 4
ஆடவர் பாட்மிண்டன்
கால் இறுதி சுற்று
ஸ்ரீகாந்த் (இந்தியா) - லின் டான் (சீனா)
நேரம்: மாலை 5.50
ஹர்திப் தோல்வி
ஆடவருக்கான மல்யுத்த போட்டியில் கிரகோ ரோமன் 98 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ஹர்திப் சிங் பங்கேற்றார். இதில் துருக்கியின் ஐடெம் செங்குடன் மோதிய அவர் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
25 வயதான ஹர்திப் சிங்குக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. செங் இறுதி போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் அரையிறுதியில் அவரிடம் தோல்வியடையும் வீரருடன் ஹர்திப் மோதக்கூடும்.