குடிநீரில் காரை கழுவிய கோலிக்கு ரூ.500 அபராதம்

குடிநீரில் காரை கழுவிய கோலிக்கு ரூ.500 அபராதம்
Updated on
1 min read

குடிநீரை கார்கள் கழுவ பயன்படுத்தியதாக விராட் கோலிக்கு குருகிராம் நகராட்சி அதிகாரிகள் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்றுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது.

இந்லையில் டெல்லி-ஹரியாணா எல்லைப் பகுதியில் உள்ள விராட் கோலியின் வீட்டில் அவரது உதவியாளர்கள் கோலிக்கு சொந்தமான 6 கார்களை கழுவுவதற்கு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரை பயன்படுத்தி வீணடிப்பதாக 30 வயது இளைஞர் ஒருவர் புகார் அளித்தார். இதன் பேரில் விசாரணை நடத்திய குருகிராம் நகராட்சி அதிகாரிகள் விராட் கோலிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in