

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து இந்திய வீரர் யுவராஜ் சிங் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கட்கிழமை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களும், கிரிக்கெட் வீரர்களும் யுவராஜ் சிங்குக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய யுவராஜ் தான் இந்திய அணிக்காக விளையாடிய 12 நம்பர் ஜெர்சி ஆடைக்கு பிரியா விடை கொடுக்கும் பொருளில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் யுவராஜ் சிங்குக்கு முறையான வகையில் பிரியா விடை அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் #YuviDeservesProperFarewell என்று டிரெண்ட் செய்து வருகின்றனர்.