

ரிஷப் பந்த்தின் அபாரமான ஆட்டம் குறித்து உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு யோசனை தெரிவித்துள்ளார் மைக்கேல் வான்
ஐபில் டி20 கிரிக்கெட் தொடர் 12வது சீஸன் கடந்த மார்ச் 23 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி இறுதிப் போட்டி தகுதி பெற்றுள்ளது.
இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் மோதும் இன்னொரு அணிக்கான தேர்வு போட்டி நேற்று (மே 8) நடைபெற்றது. இதில் டெல்லி அணியை ஒரே ஓவரில் ப்ளே ஆஃப் 2வது தகுதிச்சுற்றுக்கு இட்டுச் சென்ற ரிஷப் பந்த் 5 சிக்சர்களை விளாசினார், ரிஷப் பந்த்தின் ஆட்டத்துக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் வான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ரிஷப் பந்த் எப்படி உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பெறாமல் போனார். இந்தியா இன்னும் தன்னை மாற்றிக் கொள்ள அவகாசம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
நாளை (மே 10) சென்னை அணியுடன் டெல்லி அணி மோதுகிறது. இதில் ஜெயிக்கும் அணி மே 12-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் மும்பை அணியுடன் மோதும்.