ஐபிஎல் ஏலத்தில் 226 இந்திய வீரர்கள்; களத்தில் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலியை வீழ்த்திய ஆரோன் ஹார்டி

ஐபிஎல் ஏலத்தில் 226 இந்திய வீரர்கள்; களத்தில் பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலியை வீழ்த்திய ஆரோன் ஹார்டி
Updated on
1 min read

டிசம்பர் 18ம் தேதி ஜெய்பூரில் நடைபெறும் ஐபிஎல் ஏலத் திருவிழாவில் மொத்தம் 346 வீரர்கள் களம் காண்கின்றனர். இதில் 226 இந்திய வீரர்கள் உள்ளனர், ஆனால் இவர்களின் அடிப்படை விலை ரூ.2 கோடிக்கும் குறைவே.

அடிப்படை விலை ரூ.2 கோடி வைத்துள்ள 9 அயல்நாட்டு வீரர்களில் பிரெண்டன் மெக்கல்லம், கிறிஸ் வோக்ஸ், லஷித் மலிங்கா, ஷான் மார்ஷ், சாம் கரன், கொலின் இங்ரம், கோரி ஆண்டர்சன், அஞ்சேலோ மேத்யூஸ், டி ஆர்க்கி ஷார்ட் ஆகியோர் அடங்குவர்.

இந்திய வீரர்களில் முக்கியமானவர்கள் யுவராஜ் சிங், சஹா, ஷமி, அக்சர் படேல் ஆகியோர் தங்கள் அடிப்படை விலையை ரூ.1 கோடிக்கு நிர்ணயித்துள்ளனர். டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் ரூ.1.5 கோடிக்கு அடிப்படை விலை நிர்ணயித்துள்ளனர். இந்திய வீரர்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட்டின் அடிப்படை விலை அதிகபட்சமாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இஷாந்த் சர்மாவின் அடிப்படை விலை ரூ.75 லட்சம் மட்டுமே.  8 அணி உரிமையாளர்கள் மொத்தம் 70 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். அயல்நாட்டு வீரர்கள் 20 பேரை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.

ஏலத்தில் முதலில் சர்வதேச கிரிக்கெட் ஆடியவர்கள் பெயர்கள் அறிவிக்கப்படும், பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் ஆடாத வீரர்கள் வருவார்கள்.  அறிமுக வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த புதிர் ஸ்பின்னர் வருண் சக்ரவர்த்தி மும்பை ஆல்ரவுண்டர் ஷிவம் துபே ஆகியோர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இது தவிர 20 கூடுதல் வீரர்கள் தேவை என்று ஐபிஎல் அணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர், இதில் பயிற்சி போட்டியில் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்திய பெர்த்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆரோன் ஹார்டியும் ஒருவர். அதே போல் இங்கிலாந்து கவுண்ட்டி கிரிக்கெட் அணியான வொர்ஸ்டர் ஷயர் வேகப்பந்து வீச்சாளர் பாட் பிரவுன் உள்ளார், இவர் வளரும் நட்சத்திரம் என்று அறியப்படுபவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in