ஜப்பான் ஓபன் பாட்மிண்டன்: லக்சயா சென் முன்னேற்றம்!

லக்சயா சென்
லக்சயா சென்
Updated on
1 min read

டோக்கியோ: ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜப்பான் ஓபன் சூப்பர் 750 பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆடவர் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் 21-11, 21-18 என்ற செட் கணக்கில் சீன வீரர் வாங் ஜெங் ஜிங்கை தோற்கடித்தார்.

இதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிரக் ஷெட்டி ஜோடியும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. சாத்விக், சிராக் ஜோடி 21-18, 21-10 என்ற செட் கணக்கில் கொரியாவின் காங் மின் ஹுயுக், கிம் போங் ஜூ ஜோடியை வீழ்த்தியது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in