சுனில் நரேன் அதிரடி: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா | ஐபிஎல் 2025

சுனில் நரேன் அதிரடி: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா | ஐபிஎல் 2025
Updated on
1 min read

டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது.

முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரேன் இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். குர்பாஸ் 26 ரன்களும், சுனில் நரேன் 27 ரன்களும் எடுத்தனர். அஜிங்க்யா ரஹானே 26 ரன்கள் எடுத்தார். அடுத்து இறங்கிய ரகுவன்ஷி 32 பந்துகளில் 42 ரன்கள் குவித்து ஸ்கோரை உயர்த்தினார். அணியின் அதிகபட்ச ரன் இதுவாகவே இருந்தது.

அடுத்தடுத்து இறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்கள், ரிங்கு சிங் 36, ரஸ்ஸல் 17, ரோவ்மேன் பவல் 5, என 20 ஓவர் முடிவில் 204 அடித்தது கொல்கத்தா அணி.

205 என்ற இலக்குடன் இறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் பொரெல் 4 ரன்களுடன் நடையை கட்டினார். மறுமுனையில் இறங்கிய டுப்ளெஸ்ஸிஸ் 65 ரன்கள் குவித்து அசத்தினார். கருண் நாயர் 15, கே.எல்.ராகுல் 7 எடுத்தனர். அடுத்து இறங்கிய அக்சர் படேல் 23 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 1 ரன்னுடன் வெளியேற, அடுத்து வந்த விப்ராஜ் நிகாம் 38 ரன்கள் விளாசினார். 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணியால் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்படி 14 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. சுனில் நரேன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in