டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் நியமனம்

டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் நியமனம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் 18-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டரான அக்சர் படேல், கடந்த வாரம் நியமிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது துணை கேப்டனாக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 40 வயதான, டு பிளெஸ்ஸிஸ் கடந்த 3 சீசன்களிலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.

ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்துக்கு முன்னதாக அந்த அணி அவரை விடுவித்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் டெல்லி அணி டு பிளெஸ்ஸிஸ்-ஐ ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்திருந்தது. கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்று வரை முன்னேறியிருந்த டெல்லி கேபிடல்ஸ் இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் வரும் 24-ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் மோதுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in