தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் ரோஹித்

தேசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்றார் ரோஹித்
Updated on
1 min read

டேராடூன்: 38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான நீச்சலில் 100 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ரோஹித் பெனடிக்டன் தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான 4X400 மீட்ர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தமிழக அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஆடவருக்கான 4X400 மீட்ர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் தமிழக அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in