900 கோல் அடித்து ரொனால்டோ சாதனை

900 கோல் அடித்து ரொனால்டோ சாதனை
Updated on
1 min read

லிஸ்பன்: கால்பந்து உலகில் 900 கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். இதுவரை கால்பந்து உலகில் பல சாதனைகளைப் ரொனால்டோ படைத்திருக்கிறார். பல்வேறு விதமான கிளப் போட்டிகளில் விளையாடி வரும் இவர், பல அணிகளுக்கு கோப்பையை வென்று கொடுத்துள்ளார். ஆனால் இவரது போர்ச்சுகல் அணி மட்டும் உலகக் கோப்பையை வென்றதில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் குரோஷியாவுக்கு எதிராக விளையாடிய போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 34-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோலடித்தார். இதன் மூலம் கால்பந்து உலகில் 900 கோல் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக அர்ஜெண்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி 838 கோல் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in