மார்க் வுட் காயம்: இலங்கைக்கு எதிரான தொடரிலிருந்து விலகல்

மார்க் வுட்
மார்க் வுட்
Updated on
1 min read

லண்டன்: காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் மார்க் வுட் விலகியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்து வீரர் மார்க் வுட் தசைப்பிடிப்பு காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

அவருக்கு பதிலாக அணியில் ஜோஷ் ஹல் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 29-ம்தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in