

ஹைதராபாத்: ஐபிஎல் டி 20 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் காயம் காரணமாக விலகிய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வனிந்து ஹசரங்காவுக்குப் பதிலாக மாற்று வீரராக விஜயகாந்த் வியாஸ்காந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்காவை ரூ.1.50 கோடிக்கு சன்ரைசஸ் ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில், இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வனிந்து ஹசரங்கா நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து அவருக்குப் பதிலாக மாற்று வீரராக இலங்கையை சேர்ந்த லெக் ஸ்பின்னரான விஜயகாந்த் வியாஸ்காந்தை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. விஜயகாந்த் வியாஸ்காந்த் அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு சன் ரைசர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.