அரை இறுதியில் போபண்ணா ஜோடி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மியாமி கார்டன்ஸ்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, ஆஸ்திரலியாவின் மேத்யூ எப்டன் ஜோடியானது ஆஸ்திரேலியாவின் ஜான் பாட்ரிக் ஸ்மித், நெதர்லாந்தின் செம் வெர்பீக் ஜோடியுடன் மோதியது. இதில் போபண்ணா ஜோடி 3-6,7-6 (4),10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

தற்போதைய வெற்றியானது2-வது இடத்தில் உள்ள போபண்ணாவுக்கு, இரட்டையர் தரவரிசையில் டாப்-10-ல் தொடர்ந்து நீடிக்கவும் வரும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறவும் உதவும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in