Published : 22 Mar 2024 05:10 PM
Last Updated : 22 Mar 2024 05:10 PM

“எல்லாருமே கண்கலங்கினர்!” - தோனி முடிவை பகிர்ந்தபோது ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன?

நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் 17-வது சீசனை அணுகும் சிஎஸ்கே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக தேர்வு செய்துள்ளது. 2019-ம் ஆண்டு சிஎஸ்கே அணிக்காக அறிமுகமான ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை ஐபிஎல் தொடரில் 52 ஆட்டங்களில் விளையாடி உள்ளார்.

சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறும்போது, “சென்னை அணியின் எதிர்காலத்தை கருதியே புதிய கேப்டன் நியமன முடிவு எடுக்கப்பட்டுள்ளது. புதிய கேப்டனை நியமிக்க இதுவே சரியான நேரம் என தோனி கருதியதால் இந்த முடிவை எடுத்துள்ளோம். ருதுராஜை தேர்வு செய்ததும் அவர்தான். முடிவுகளை எடுக்கக் கூடியதில் அவர் சிறப்பானவர்" என்று தெரிவித்தார்.

தோனியின் விலகல் முடிவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்றபோதும் ரசிகர்களுக்கு அது அதிர்ச்சி நிறைந்த ஒன்றாகவே அமைந்தது. அதேநேரம், கேப்டன் மாறப்போகும் விஷயத்தை வீரர்களிடம் தோனி சொன்னபோது சிஎஸ்கே ட்ரெஸ்ஸிங் ரூமின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் ட்ரெஸ்ஸிங் வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், "தோனி செய்தியை சொன்னபோது ட்ரெஸ்ஸிங் ரூமில் நிறைய பேர் உணர்ச்சிவசப்பட்டனர். அந்த ட்ரெஸ்ஸிங் அறையில் கண்கலங்காதவர்களே இல்லை. அனைவரும் நெகிழ்ந்தனர். ருதுராஜுக்கு வாழ்த்துகளும் வந்தன. கடந்த முறை தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியபோது நாங்கள் தயாராக இல்லை. ஆனால், இப்போது முன்கூட்டியே முடிவு எடுத்தார்.

ருதுராஜ் அதிகம் அலட்டிக்கொள்பவர் இல்லை. ஆனால் நம்மை சரியான திசையில் வழிநடத்தும் குணங்கள் அவரிடம் உள்ளன." என்று ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x