சீனா ஓபன் பாட்மிண்டன் | பிரனோய், லக்‌ஷயா சென் முதல் சுற்றில் வெளியேற்றம்

லக்‌ஷயா சென் மற்றும் ஹெச்.எஸ்.பிரனோய்
லக்‌ஷயா சென் மற்றும் ஹெச்.எஸ்.பிரனோய்
Updated on
1 min read

சாங்சோ: சீனா ஓபன் பாட்மிண்டன் தொடரில் முதல் சுற்றிலேயே இந்திய வீரர்களான ஹெச்.எஸ்.பிரனோய், லக்‌ஷயா சென் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

சீனாவின் சாங்சோ நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனோய், 22-ம் நிலை வீரரான மலேசியாவின் டிசே யோங்குடன் மோதினார். ஒரு மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் 6-ம் நிலை வீரரான பிரனோய் 12-21, 21-13 18-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் லக்‌ஷயா சென், டென்மார்க்கின் ஆண்டர்ஸ் ஆன்டன்சனுடன் மோதினார். இதில் லக்‌ஷயா சென் 21-23, 21-16, 9-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் நடைபெற்றது. மற்றொரு இந்திய வீரரான பிரியன்ஷு ரஜாவத் 13-21, 24-26 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஷேசர் ஹிரென் ருஸ்டாவிடோவிடம் வீழ்ந்தார்.

மகளிருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி 18-21, 11-21 என்ற செட் கணக்கில் சீனாவின் சென் குயிங், ஜி யி ஃபேன் ஜோடியிடம் தோல்வி அடைந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாட இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து கடைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகினார். இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு தயாராகும் விதமாக சீன ஓபன் தொடரில் விலகுவதாக அவர், அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in