

பெர்லின்: ஜெர்மனியின் பெர்லின் நகரில் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் 17 வயதான இந்திய வீராங்கனை அதிதி சுவாமி இறுதிப் போட்டியில் மெக்சிகோவின் ஆண்ட்ரியா பெசெராவை எதிர்த்து விளையாடினார். இதில் அதிதி சுவாமி 149-147 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார்.
அதிதி சுவாமி கடந்த ஜூலை மாதம் அயர்லாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தார். தற்போது சீனியர் பிரிவில் அவர், உலக சாம்பியன்ஷிப்பில் வாகை சூடி உள்ளார். இதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையும், உலக அளவில் இளம் வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார் அதிதி சுவாமி.