அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4: சென்னை, டெல்லி அணிகள் அரை இறுதிக்கு முன்னேற்றம்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் சென்னை லயன்ஸ் அணியின் ஷரத் கமலுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய தபாங் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன்.
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில் சென்னை லயன்ஸ் அணியின் ஷரத் கமலுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடிய தபாங் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன்.
Updated on
1 min read

புனே: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் - தபாங் டெல்லி டிடிசி அணிகள் மோதின. இந்த மோதலில் டெல்லி தபாங் அணி 9-6 என்ற கணக்கில் சென்னை லயன்ஸ் அணியை வீழ்த்தியது.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன் 3-0 (11-10, 11-3, 11-6) என்ற செட் கணக்கில் சென்னை லயன்ஸ் அணியின் ஷரத் கமலை தோற்கடித்தார். 2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை லயன்ஸ் அணியின் யாங்ஸி லியு 2-1 (11-8, 8-11, 11-8)என்ற கணக்கில் டெல்லி அணியின் ஸ்ரீஜா அகுலாவை வீழ்த்தினார்.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் டெல்லி அணியின் சத்தியன், பார்போரா ஜோடி2-1 (11-7,11-6,7-11) என்ற கணக்கில் சென்னை அணியின் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடியை தோற்கடித்தது. தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் பெனடிக்ட் டூடா 3-0 (11-8, 11-6, 11-7) என்ற கணக்கில் டெல்லி அணியின் ஜான் பெர்சனை வீழ்த்தினார்.

கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் டெல்லி அணியின் பார்போரா 2-1 (11-6, 4-11, 11-9) என்ற கணக்கில் சென்னை அணியின் பிராப்தி ஷெனை வென்றார். இந்த ஆட்டத்தின் முடிவில் தபாங் டெல்லி 42 புள்ளிகளுடனும், சென்னை லயன்ஸ் 41 புள்ளிகளுடனும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in