

சீனாவின் நாங்சாங்கில் நடைபெற்று வரும் சர்வதேச மகளிர் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா 6-4, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் ஜப்பானைச் சேர்ந்த தகுதி நிலை வீராங்கனை ஜுன்ரி நமிகட்டாவைத் தோற்கடித்தார். இதன்மூலம் டபிள்யூ.டி.ஏ. (மகளிர் டென்னிஸ் சங்கம்) டென்னிஸ் போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் அங்கிதா. அடுத்த சுற்றில் ஹாங்காங்கின் லிங் ஜாங்கை அவர் சந்திக்கிறார்.
வெற்றி குறித்துப் பேசிய அங்கிதா, “நான் இங்கு வரும்போது டபிள்யூ.டி.ஏ. போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும் என்ற கனவோடு வந்தேன். அது இப்போது நடந்திருக்கிறது. அதனால் மிகுந்த மகிழ்ச்சி யாக இருக்கிறேன்” என்றார்.