வேளாங்கண்ணியில் இன்று பெரிய தேர் பவனி: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு பெரிய தேர் பவனி இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, வேளாங்கண்ணியில் நேற்று குவிந்த பக்தர்கள் கூட்டம்.

ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு பெரிய தேர் பவனி இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, வேளாங்கண்ணியில் நேற்று குவிந்த பக்தர்கள் கூட்டம்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: ​நாகை மாவட்​டம் வேளாங்​கண்ணி பேரால​யத்​தின் ஆண்​டுப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி இன்று (செப்​.7) நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் வேளாங்​கண்​ணி​யில் குவிந்​துள்​ளனர்.

வேளாங்​கண்​ணி​யில் உலகப் பிரசித்​திபெற்ற புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் ஆண்​டுப் பெரு​விழா ஆக.29-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான பெரிய தேர் பவனி இன்​று (செப்​.7) இரவு 7 மணிக்கு மேல் நடக்கிறது. முன்​ன​தாக, பேராலய கலை​யரங்​கில் மாலை 5 மணிக்கு தமிழில் ஜெப​மாலை, மாதா மன்​றாட்​டுடன் தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் தலை​மை​யில் சிறப்பு கூட்​டு திருப்​பலி நடை​பெறும்.

அதைத்​தொடர்ந்​து, மின் விளக்​கு​களால் அலங்​கரிக்​கப்​பட்ட பெரிய தேரில் வைக்​கப்​படும் அன்னை சொரூபத்தை ஆயர் சகாய​ராஜ் புனிதம் செய்து வைக்​கிறார். பின்​னர், மிக்​கேல் அதிதூதர், செபஸ்​தி​யார், சூசையப்​பர், உத்​திரிய மாதா உள்​ளிட்ட 6 தேர்​கள் முன்னே செல்ல நூற்​றுக்​கணக்​கான பெண் பக்​தர்​கள் ஆரோக்​கிய அன்னை எழுந்​தருளிய பெரிய தேரை தோள்​களில் சுமந்து செல்ல உள்​ளனர்.

வேளாங்​கண்ணி பேராலய முகப்​பில் இருந்து தொடங்​கும் பெரிய தேர் பவனி, கடற்​கரை சாலை, ஆரிய​நாட்​டுத் தெரு, உத்​திரிய மாதா தெரு, கடைவீதி வழி​யாகச் சென்று மீண்​டும் பேரால​யத்தை வந்​தடை​யும். இந்த தேர் பவனியை காண வெளி​நாடு, வெளி மாநிலங்​கள் மற்​றும் தமிழகத்​தின் பல்​வேறு பகு​தி​களில் இருந்தும் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் குவிந்​துள்​ளனர்.

தொடர்ந்​து, நாளை (செப்​.8) ஆரோக்​கிய அன்னை பிறந்த நாள் விழாவை முன்​னிட்​டு, பேரால​யத்​தில் சிறப்பு திருப்​பலி நடை​பெற உள்​ளது. பின்​னர், மாலை 6 மணிக்கு கொடி​யிறக்​கத்​துடன் பெரு​விழா நிறைவடைகிறது. இதையொட்​டி, நாகை மாவட்​டத்​துக்கு நாளை உள்​ளூர் விடு​முறை அளிக்​கப்​பட்​டுள்​ளது.

தேர் பவனியையொட்​டி, 2,000-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்​துகளும், சிறப்பு ரயில்​களும் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன.

<div class="paragraphs"><p>ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு பெரிய தேர் பவனி இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி, வேளாங்கண்ணியில் நேற்று குவிந்த பக்தர்கள் கூட்டம்.</p></div>
"ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது" - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in