சந்நிதானத்தில் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

சந்நிதானத்தில் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு
Updated on
1 min read

குமுளி: சபரிமலை​யில் பக்​தர்​கள் கூட்​டம் நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. கூட்​டத்தை ஒழுங்​குபடுத்த பல்​வேறு புதிய கட்​டுப்​பாடு​களை தேவசம் போர்டு அறி​வித்​துள்​ளது.

சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் நவ. 17-ம் தேதியி​லிருந்து மண்டல வழி​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. வரும் 27-ம் தேதி நடை​பெறும் மண்டல பூஜை​யின்​போது ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணி​வித்​து,சிறப்பு பூஜை நடை​பெறும்.

இந்​நிலை​யில், சபரிமலைக்கு பக்​தர்​களின் வருகை நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. நேற்று நிலக்​கல், பம்​பை, நீலிமலை, சந்​நி​தானம் உள்​ளிட்ட பகு​தி​களில் வழக்​கத்​தை​விட கூட்​டம் அதி​க​மாக இருந்​தது. பலரும் முன்​ப​திவு செய்த தேதி​யில் வராமல் வேறு தேதி​யில் தரிசனத்​துக்கு வந்​த​தால் குழப்​பம் ஏற்​பட்​டது. இவர்​களை ஸ்பாட் புக்​கிங் மூலம் மீண்​டும் பதிவு செய்து வரச் சொன்​ன​தால் தாமதம் ஏற்​பட்​டது.

முன்​ப​திவு செய்​யாமல் ஏராள​மானோர் ஸ்பாட் புக்​கிங்​கில் வந்​தனர். இது​போன்ற காரணங்​களால் சபரிமலை​யில் கடந்த சில நாட்​களாக கூட்​ட​ நெரிசல் அதி​கரித்​துள்​ளது. வழக்​க​மாக 4 மணி நேரம் காத்​திருக்​கும் பக்​தர்​கள், சுவாமி தரிசனத்​துக்கு தற்​போது 6 மணி நேரம் காத்​திருக்​கும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

இதையடுத்து பல்​வேறு கட்​டுப்​பாடு​களும், விதி​முறை​களும் அறிவிக்​கப்​பட்டு வரு​கின்​றன. மேலும், இவற்றை பக்​தர்​கள் தெரிந்​து​கொள்​ளும் வகை​யில் மெகா போன் மூலம் அறி​விப்பு செய்​யும் நடை​முறையை சந்​நி​தான சிறப்பு அதி​காரி பி.​பால​கிருஷ்ணன் நாயர் நேற்று தொடங்கி வைத்​தார். பல்​வேறு மாநிலங்​களில் இருந்து பக்​தர்​கள் வரு​வ​தால், அவர்​கள் எளி​தாகப் புரிந்​து​கொள்​வதற்​காக தமிழ், மலை​யாளம், தெலுங்​கு, கன்​னடம் உள்​ளிட்ட மொழிகளில் தொடர்ந்து அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில், தரிசனம் முடித்த பக்​தர்​கள் உடனடி​யாக வெளி​யேறிச் செல்​வ​தில்லை என்று புகார் எழுந்​துள்​ளது. மாளி​கைப்​புரம், மணிமண்​டபம் உள்​ளிட்ட பல்​வேறு பகு​தி​களி​லும் புகைப்​படம், வீடியோ எடுப்​ப​தில் பக்​தர்​கள் ஆர்​வம் காட்​டு​வ​தால் அவ்​வப்​போது கூட்ட நெரிசல் ஏற்​படு​கிறது. இதை தடுக்க 18-ம் படி, திரு​முற்​றம் உட்பட சந்​நி​தானத்​தின் எந்த இடத்​தி​லும் செல்​போனைப் பயன்​படுத்​தக் கூடாது. மீறி​னால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தேவசம் போர்டு தெரி​வித்​துள்​ளது.

குளுக்​கோஸ் வழங்க ஏற்​பாடு: சபரிமலை பெரிய நடைப்​பந்​தல் அருகே பக்​தர்​களுக்​கான உதவி மையத்​தில் குளுக்​கோஸ் வழங்​கும் திட்​டம் நேற்று தொடங்​கப்​பட்​டது. மொத்​தம் 16 இடங்​களில் 24 மணி நேர​மும் பக்​தர்​களுக்கு குளுக்​கோஸ்விநி​யோகிக்​கப்​படும் என்று தெரிவிக்​கப்​பட்​டது. அவசர மருத்​துவ தேவைக்கு உதவி மைய எண் 14432 அல்​லது 04735 203232 என்ற எண்​ணுக்கு தொடர்பு கொள்​ளலாம் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

சந்நிதானத்தில் காத்திருக்கும் பக்தர்கள் கூட்டம்: சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு
“தென்னிந்தியாவில் பாஜக வளர்ந்து வருகிறது” - தேசிய செயல் தலைவர் நிதின் நிபின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in