திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
Updated on
1 min read

சென்னை: ​திரு​வல்​லிக்​கேணி பார்த்​த​சா​ரதி பெரு​மாள் கோயி​லில் ஆண்​டு​ தோறும் சித்திரை மாத பிரம்​மோற்சவ விழா வெகு விமரிசை​யாகக் கொண்​டாடப்​படும்.

அந்த வகை​யில், இந்த ஆண்​டுக்​கான பிரம்​மோற்சவ விழா நாளை (மே 1) கொடியேற்​றத்​துடன் தொடங்​கு​கிறது. இதையொட்டி புஷ்பப் பல்​லக்கு சேவை நேற்று இரவு நடை​பெற்​றது.

பல்​வேறு வண்ண மலர்​களால் அலங்​கரிக்​கப்​பட்ட பல்​லக்​கில் எழுந்​தருளிய எம்​பெரு​மானை திரளான பக்​தர்​கள் தரிசித்து பரவசமடைந்​தனர். தொடர்ந்து இன்று (30-ம் தேதி) அங்​கு​ரார்ப்​பணம் எனும் முளை​யிடு​தல் விழா நடக்​கிறது.

மே 1-ம் தேதி (நாளை) கொடியேற்​றத்​துடன் பிரம்​மோற்​சவம் தொடங்​கு​கிறது. தொடர்ந்​து, தினமும் பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி வீதி உலா நடக்​கிறது.

பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் 7-ம் தேதி நடை​பெறுகிறது. 8-ம் தேதி பல்​லக்​கில் வெண்​ணெய் தாழி கண்​ணன் திருக்​கோலத்​தில் சுவாமி புறப்​பாடு நடை​பெறுகிறது.

9-ம் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்​லக்​கு, காலை 11 மணிக்கு தீர்த்​த​வாரி நடக்​கிறது. அன்று இரவு கொடி​யிறக்க நிகழ்வு நடை​பெறும். 10-ம் தேதி இரவு 10 மணிக்கு சிறிய திருத்​தேர் நிகழ்​வுடன் விழா நிறைவடைகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சித்திரை பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
தமிழக வாக்கு எண்ணிக்கையை பார்வையிட மே 2-ல் தேர்தல் பார்வையாளர்கள் வருகை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in