மயிலை கபாலீஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம் - இன்று அறுபத்து மூவர் விழா

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.| படங்கள்: ம.பிரபு |

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.| படங்கள்: ம.பிரபு |

Updated on
1 min read

சென்னை: மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயி​லில் பங்​குனிப் பெரு​விழா கடந்த 23-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. முதல் நாளன்று பவளக்​கால் விமானத்​தில் கபாலீஸ்​வரர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தார்.

அதைத் தொடர்ந்​து, அன்னை கற்​ப​காம்​பாள் மயில் வடி​வில் காட்சி தரும் அற்​புத நிகழ்​வும், சுவாமி, அம்​பாள், முரு​கப் பெரு​மான் வீதி உலா​வும் நடை​பெற்​றன. அதி​கார நந்​தி, சவுடல் விமானம் உள்​ளிட்ட பல்​வேறு வாக​னங்​களில் சுவாமி மாட வீதி​களில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு காட்​சி​யளித்​தார்.

இந்​நிலை​யில், பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களில் ஒன்​றான தேரோட்​டம் நேற்று விமரிசை​யாக நடை​பெற்​றது. 96 அடி உயரம், 300 டன் எடைகொண்ட பிரம்​மாண்​டத் தேரில் கபாலீஸ்​வரர், கற்​ப​காம்​பாள் காலை 6 மணிக்கே எழுந்​தருளினர்.

6.30 மணி அளவில் பக்​தர்​கள் வடம் பிடிக்க, தேரோட்​டம் தொடங்​கியது. அலைகடலெனத் திரண்​டிருந்த பக்​தர்​கள் ‘சம்போ மகாதே​வா’ என்ற முழக்​கத்​துடன் தேரை இழுத்​துச் சென்​றனர்.

சிவ வாத்​தி​யங்​கள் முழங்க, நான்கு மாட​வீ​தி​களி​லும் கம்​பீர​மாக அசைந்​தாடி வந்த தேர் காலை 11 மணி அளவில் நிலையை வந்​தடைந்​தது. 1,000-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்புப் பணி​யில் ஈடு​பட்​டனர்.

தனி​யார் அமைப்​பு​கள், தன்​னார்​வலர்​கள் சார்​பில் மாட வீதி​களில் பந்​தல்​கள் அமைத்​து, பக்​தர்​களுக்கு நீர்​மோர், பானகம் உள்​ளிட்​டவை வழங்​கப்​பட்​டன. பங்​குனிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்​வு​களில் ஒன்​றான‘அறு​பத்து மூவர்’ விழா இன்று மதி​யம் 3 மணி அளவில் தொடங்​கு​கிறது.

வெள்ளி விமானத்​தில் சிவபெரு​மான் 63 நாயன்​மார்​களோடு வலம் வரும் காட்​சி​யைக்காண, சென்னை, புறநகர் பகு​தி​கள் மட்​டுமன்றி பல்​வேறு மாவட்​டங்​களில் இருந்​தும் ஏராள​மான பக்​தர்​கள் வரு​வார்​கள் என்​ப​தால் விரி​வான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ளன.

இதைத் தொடர்ந்​து, ஏப்​.1-ம் தேதி இரவு 8.30 மணிக்கு திருக்​கல்​யாண உற்​சவம், 3-ம் தேதி விழா நிறைவுத் திரு​முழுக்கு (தீர்த்​த​வாரி) நடை​பெற உள்​ளது. ஏப்​.10-ம் தேதி வரை விடை​யாற்றி விழா உற்​சவ​மும் நடை​பெறுகிறது.

திரு​வான்​மியூர் மருந்​தீஸ்​வரர் மற்​றும் மல்​லீஸ்​வரர் கோயில்​களி​லும் நேற்று தேர்த் திரு​விழா விமரிசை​யாக நடை​பெற்​றது. திரளான பக்​தர்​கள் கலந்​து​கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்​தனர்​.

<div class="paragraphs"><p>மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் தேரில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.| படங்கள்: <em>ம.பிரபு</em> |</p></div>
​​திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் மண்டப மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in