சக்​கர ஸ்​நான நிகழ்ச்சியுடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு

சக்​கர ஸ்​நான நிகழ்ச்சியுடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
Updated on
1 min read

திரு​மலை: திருப்பதி ஏழு​மலை​யான் கோயில் பிரம்மோற்சவ விழா நேற்று காலை சக்கர ஸ்நான நிகழ்ச்​சி​யுடன் நிறைவடைந்தது. திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. கடந்த 9 நாட்​களாக காலை, இரவு ஆகிய இரு வேளை​யும் பல்​வேறு வாக​னங்​களில் உற்​சவ​ரான மலை​யப்​பர் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு அருள் புரிந்​தார்.

பிரம்​மோற்​சவத்​தின் உச்ச கட்ட நிகழ்ச்​சி​யான கருட சேவைக்கு திரளான பக்​தர்​கள் திரு​மலை​யில் குவிந்​தனர். பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை, கோயில் தெப்​பக்​குளத்​தின் அருகே ஸ்ரீதே​வி, பூதேவி சமேத​மாய் மலையப்பர் மற்​றும் சக்​கரத்​தாழ்​வாருக்கு சிறப்பு திரு​மஞ்சன நிகழ்ச்​சிகள் நடந்​தன.

அதன் பின்​னர் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடை​பெற்​றது. அப்​போது அங்கு கூடி​யிருந்த ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் ‘கோ​விந்தா கோவிந்​தா’ என பக்​தி​யுடன் புனித நீராடினர். நேற்று முழு​வதும் ஏராள​மான பக்​தர்​கள் ஏழு​மலை​யான் தெப்​பக்​குளத்​தில் புனித நீராடினர். இதனை தொடர்ந்து நேற்று மாலை கோயி​லில் ஏற்​றப்​பட்ட கருடன் சின்​னம் பொறித்த கொடி இறக்க நிகழ்ச்சி நடந்​தது. இத்​துடன் வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா நிறைவடைந்​தது.

சக்​கர ஸ்​நான நிகழ்ச்சியுடன் திருப்பதி பிரம்மோற்சவம் நிறைவு
கர்நாடகாவை சேர்ந்​தவர் ஷார்ஜாவில் வெட்டி கொலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in