கர்நாடகாவை சேர்ந்​தவர் ஷார்ஜாவில் வெட்டி கொலை

கர்நாடகாவை சேர்ந்​தவர் ஷார்ஜாவில் வெட்டி கொலை
Updated on
1 min read

பெங்​களூரு: கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்​டம் குந்​தாபு​ராவை சேர்ந்​தவர் ஆல்​வின் பிர​காஷ் (52). இவர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் உள்ள ஷார்ஜா விமான நிலை​யத்​தில் கடந்த 14 ஆண்டு​களாகப் பணியாற்றி வந்​தார். இவரது மனைவி டினா பிரகாஷ் அங்​குள்ள பள்​ளி​யில் ஆசிரியை​யாகப் பணி​யாற்றி வருகிறார். இவர்​களின் மகன் அதே பள்​ளி​யில் 10ம் வகுப்பு படித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் கடந்த ஜூலை 20ம் தேதி ஆல்​வின் பிர​காஷின் சகோ​தரர் அனில் பிரஷாந்த் அவரை செல்​போனில் தொடர்பு கொண்​டார். ஆனால் அவர் அழைப்பை ஏற்​காமல், தான் நலமாக இருப்​ப​தாக குறுஞ்​செய்தி அனுப்​பி​னார். மீண்​டும் அனில் பிரஷாந்த் தனது சகோ​தரரை​யும், அவரது மனை​வியை​யும் தொலைபேசி​யில் அழைத்த போது இரு​வரை​யும் தொடர்பு கொள்ள முடிய​வில்​லை.

இதனால் சந்​தேகமடைந்த அனில் பிரஷாந்த் ஷார்​ஜா​வில் உள்ள ஆல்​வின் பிர​காஷின் நண்​பர் மனோகரிடம் வீட்​டுக்கு நேரில் சென்று விசா​ரிக்​கு​மாறு கூறி​யுள்​ளார். அவர் வீட்​டிற்கு சென்று பார்த்​த​போது, ஆல்​வின் பிர​காஷ் குடும்​பத்​தினருடன் இந்​தி​யா​வுக்கு சென்​று​விட்​ட​தாக காவலாளி கூறி​யுள்​ளார்.

இதையடுத்து அவர் பணி​யாற்​றிய‌ நிறு​வனத்​தில் விசா​ரித்த போது, அவர்​களும் ஆல்​வின் பிர​காஷ் சொந்த ஊருக்​குத் திரும்​பி​விட்​ட​தாகக் கூறினர். இதனால் சந்​தேகமடைந்த அனில் பிரஷாந்த் இணை​யதளம் வாயி​லாக ஐக்​கிய அரபு அமீரக போலீ​ஸில் புகார் அளித்​தார். மேலும் அங்​குள்ள இந்​திய தூதரகத்தை தொடர்​பு கொண்​டு, ஆல்​வின் பிர​காஷ் குடும்​பத்​தினரை​ மீட்​டுத்​தரு​மாறு கோரிக்கை விடுத்​தார்.

இதையடுத்து போலீ​ஸார், ஆல்​வின் பிர​காஷ் மற்​றும் அவரது குடும்​பத்​தின் பாஸ்​போர்ட் பதிவு​களைச் சோதித்​தனர். அதில் அவர்​கள் 3 பேரும் இந்​தி​யா​வுக்கு வரவில்லை என்​பதும், ஷார்​ஜா​விலே தங்​கி​யிருப்​பதும் தெரிய​வந்​தது.

இதனைத் தொடர்ந்து போலீ​ஸார் ஆல்​வின் பிர​காஷின் செல்போன் நடவடிக்​கையை ஆராய்ந்​த​தில் அவர் கடைசி​யாக ஓமன் செல்​லும் சாலைக்கு சென்​றது தெரிய​வந்​தது. அங்கு சென்று தீவிர​மாக‌ தேடிய போது, அங்​குள்ள சாலை​யில் நின்றிருந்த காரில் 2 பைகளில் 9 துண்​டு​களாக வெட்​டிக் கொடூரமாக கொலை செய்யப்​பட்ட நிலை​யில் ஆல்​வின் பிரகாஷின் சடலம் கண்டெடுக்கப்​பட்​டது.

மனைவி மகன் மாயம்

அங்​குள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் உள்ள‌ சிசிடிவி கேம​ரா​வில், 2 ஆண்​கள் மற்​றும் ஒரு பெண் ஆகியோர் காரில் இருந்து அவசரமாக வெளி​யேறும் காட்​சிகள் பதி​வாகி​யுள்​ளன. இதனை அடிப்​படை​யாக வைத்து போலீ​ஸார் தீவிர​மாக விசா​ரித்து வருகின்​றனர். காணா​மல் போன ஆல்​வின் பிர​காஷின் மனைவி மற்​றும் மகனை​யும் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

கர்நாடகாவை சேர்ந்​தவர் ஷார்ஜாவில் வெட்டி கொலை
அக்.10-ல் சென்னை வருகிறார் ராகுல் காந்தி: ‘மாணவர் குரல்’ கலந்துரையாடலில் பங்கேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in