

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு திருப்பந்தியூர் செல்வ விநாயகர் நேற்று 18 ஆயிரம் கடலை உருண்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே திருப்பந்தியூரில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று செல்வ விநாயகர் 18 ஆயிரம் கடலை உருண்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர் அருகே உள்ள திருப்பந்தியூர் கிராமத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று ஆனி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், நேற்று காலை 9 மணி முதல், இரவு 9.30 மணிவரை செல்வ விநாயகர் 18 ஆயிரம் கடலை உருண்டைகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மாலை 5 மணியளவில் வழித்துணை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை திருக்கயிலாய வாத்திய இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மூன்று வேளையும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில், திருப்பந்தியூர், பண்ணூர், கொட்டையூர், மப்பேடு, கீழச்சேரி, உளுந்தை, பேரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.