

காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ விழாவுக்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (மே 8) தொடங்க உள்ளன.
திருநள்ளாறு கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்கள் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு இவ்விழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம் ஏப்.23-ம் தேதி நடைபெற்றது. சார்பு தலங்களான ஐயனார், பிடாரியம்மன், மாரியம்மன் கோயில்களில் உற்சவம் அண்மையில் நிறைவடைந்தது.
தர்பாரண்யேஸ்வரர் கோயில் கொடியேற்றத்துக்கு முன்பாக உற்சவத்தின் பூர்வாங்க பூஜைகள் இன்று காலை 7 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுன் தொடங்குகிறது. நாளை (மே 9) மகா கணபதி ஹோமம், மறுநாள் வாஸ்து சாந்தி பூஜை, 11-ம் தேதி மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பண பூஜைகள் நடைபெற உள்ளன.
12-ம் தேதி ஆச்சார்ய ரக் ஷாபந்தனம் செய்யப்பட்டு, 13-ம் தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.