தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: இன்று மாலை தேரோட்டம்

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: இன்று மாலை தேரோட்டம்
Updated on
1 min read

பழநி: பழநி தைப்​பூசத் திரு​விழா​வில் நேற்று முத்​துக்​கு​மார சுவாமிக்கு திருக்​கல்​யாண உற்​சவம் கோலாகல​மாக நடை​பெற்​றது. விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் இன்று மாலை நடை​பெறுகிறது.

பழநி தண்​டா​யுத​பாணி சுவாமி கோயி​லின் உப கோயி​லான பெரிய​நாயகி​யம்​மன் கோயி​லில் தைப்​பூசத் திரு​விழா ஜன. 26-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது. தின​மும் வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சுவாமி பல்​வேறு வாக​னங்​களில் வீதி உலா வந்து பக்​தர்​களுக்கு அருள்​பாலித்​தனர். தின​மும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பாத​யாத்​திரை​யாக​வும், பேருந்​துகள், ரயில்​கள் மற்​றும் சொந்த வாக​னங்​களி​லும் பழநி வந்த வண்​ணம் இருக்​கின்​றனர்.

விழா​வின் 6-ம் நாளான நேற்று இரவு 7 மணிக்கு மேல் திருக்​கல்​யாண உற்​சவம் கோலாகல​மாக நடை​பெற்​றது. தொடர்ந்​து, இரவு 9 மணிக்கு மேல் மணக்​கோலத்​தில் வள்​ளி, தெய்​வானை சமேத முத்​துக்​கு​மார சு​வாமி வெள்​ளித்​தேரில் எழுந்​தருளி நான்கு ரத வீதி​களில் வலம் வந்து பக்​தர்​களுக்கு காட்சியளித்தார்.

விழா​வின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் இன்று மாலை நடை​பெற உள்​ளது. இதையொட்​டி, இன்று அதி​காலை 5 மணிக்கு மேல் முத்​துக்​கு​மார சுவாமி தோளுக்​கினி​யானில் சண்​முக ந​திக்கு எழுந்​தருள்​கிறார். பின்​னர், காலை 11.15 மணிக்கு மேல் தேரேற்​றம் நடை​பெற உள்​ளது. இதைத் தொடர்ந்​து, மாலை 4 மணிக்கு மேல் நான்கு ரத வீதி​களில் தேரோட்​டம் நடை​பெற உள்​ளது. இரவு 7 மணிக்கு மேல் தேர்க்​கால் பார்க்​கும் நிகழ்ச்சி நடை​பெறும்.

மேலும் பிப். 4-ம் தேதி காலை 9 மணிக்கு திரு​வூடல் நிகழ்ச்​சி​யும், இரவு 7 மணிக்கு மேல் தெப்​பத் திரு​விழா​வும் நடை​பெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல்​ கொடி இறக்​குதலுடன்​ திரு​விழா நிறைவு பெறுகிறது.தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநியில் குவிந்து வருவதால், போலீஸார் பாதுகாப்பு பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்: இன்று மாலை தேரோட்டம்
வாக்காளர் பட்டியலில் திருத்தம் கோரி 35 லட்சம் பேர் விண்ணப்பம்: பெயர் சேர்ப்பதற்கான அவகாசம் நிறைவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in