தென்காசி சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம் கோலாகலம்

ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Updated on
1 min read

தென்காசி: தென்​காசி மாவட்​டம், சங்​கரன்​கோ​வில் சங்​கர​நா​ராயண சுவாமி கோயி​லில் ஆண்​டு​தோறும் ஆடி மாதம் உத்​தி​ராடம் நட்​சத்​திரம் நாளில், கோமதி அம்​பாளுக்கு சங்கர நாராயண​ராக, சிவபெரு​மான் காட்சி கொடுக்​கும் ஆடித்​தபசு திரு​விழா மிகச் சிறப்​பாக நடை​பெறும். இந்த ஆண்​டுக்​கான திரு​விழா நேற்று காலை கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

சைவ, வைணவ ஒற்​றுமையை விளக்​கும் இவ்​விழா​வில், நேற்று காலை 3 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டு, 3.30 மணிக்கு திரு​வனந்​தல் பூஜை நடை​பெற்​றது. கோமதி அம்​பாள் சிவி​கை​யில் எழுந்​தருளி பக்​தர்​களுக்கு காட்சி அளித்​தார். பின்​னர், கொடிப்​பட்​டம் வீதி உலா நடை​பெற்​றது. காலை 7.05 மணிக்கு அம்​மன் சந்​நி​தி​யில் உள்ள தங்​கக் கொடிமரத்​தில் கொடியேற்​றம் நடை​பெற்​றது. ஏராள​மான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர்.

விழா​வின் 9-ம் நாளான ஜூலை 26-ம் தேதி தேரோட்​டம் நடை​பெறுகிறது. ஆடித்​தபசு ஜூலை 28-ம் தேதி நடை​பெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு கோமதி அம்​பாளுக்கு அபிஷேகம், அலங்​கார பரிவட்​டம் சாத்​தும் நிகழ்ச்சி நடை​பெறுகிறது. மதி​யம் 12 மணிக்கு மேல் 1 மணிக்​குள் தங்​கச் சப்​பரத்​தில் தவக்​கோலத்​தில் கோமதி அம்​பாள் தெற்கு ரத வீதி​யில் உள்ள தவசு மண்​டபத்​துக்கு எழுந்​தருளும் நிகழ்ச்சி நடை​பெறும்.

ஜூலை 28 மாலை 6.05 மணிக்கு மேல் ஹரி​யும், சிவனும் ஒன்று என்​பதை உணர்த்​தும் வகை​யில், சங்கர நாராயண சுவாமி​யாக ரிஷப வாக​னத்​தில் சிவபெரு​மான், கோமதி அம்​பாளுக்கு தபசு காட்சி கொடுக்​கிறார். இரவு 11.45 மணிக்கு மேல் யானை வாக​னத்​தில் கோமதி அம்​பாளுக்கு சங்​கரலிங்க சுவாமி​யாக காட்சி கொடுக்​கும் நிகழ்ச்சி நடை​பெறுகிறது.

ஜூலை 29-ம் தேதி சுவாமி, அம்​பாள் இரண்டு சப்​பரங்​களில் ஒரே நேரத்​தில் சப்​தாவர்​ணத்​தில் பக்​தர்​களுக்கு காட்​சி​யளிக்​கும் நிகழ்ச்சி நடக்​கிறது.

கொடியேற்ற விழா​வில் தென்​காசி எம்​.பி. ராணி ஸ்ரீகு​மார், முன்​னாள் அமைச்​சர் வி.எம்​.​ராஜலட்​சுமி, திலீபன் ஜெய்​சங்​கர் எம்​எல்ஏ, சங்​கரன்​கோ​வில் நகராட்சி தலை​வர் கவுசல்​யா, நகராட்சி ஆணை​யர் லெட்​சுமி, கோயில் இணை ஆணை​யர் சுரேஷ், துணை ஆணை​யர் ரோஜாலி சுமதா உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

<div class="paragraphs"><p>சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். </p></div>
“சோனம் வாங்சுக்கின் பொறுமையை சோதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு அண்ணா ஹசாரே வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in