காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி - பக்தர்கள் பங்கேற்பு

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அபி ஷேகம் செய்யும் இளைய பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அபி ஷேகம் செய்யும் இளைய பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

Updated on
1 min read

சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந் திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா, சங்கர மடம் வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ விஜயேந்திர சரஸ் வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலே சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, புனித நீர் அடங்கிய கலசங்களுக்குப் பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து, ஆச்சார்ய சுவாமிகளுக்கு மங்கல இசையுடன் விசேஷ கலசாபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக, தமிழகம், பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கியத் திருத்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட கோயில் பிரசாதங்கள் ஆச்சார்ய சுவாமிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இளைய மடா திபதி ஸ்ரீ சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஆச்சார்ய சுவாமிக்கு அபிஷேகம் செய்தார்.

இந்த விழாவில் ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமிகளின் அருளாசி பெற்றனர். விழா ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடத்தின் வரவேற்புக் குழுவினர் செய்திருந்தனர்.

<div class="paragraphs"><p><em>காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு அபி ஷேகம் செய்யும் இளைய பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.</em></p></div>
நொய்டாவில் புதிய சர்வதேச விமான நிலையம்: ஜெர்மன் - இந்தியா பிஸினஸ் அலையன்ஸுடன் உ.பி. அரசு ஒப்பந்தம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in