ஸ்ரீவில்லி. ஆண்டாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நாளை தொடக்கம்

சிறப்பு அலங்​காரத்​தில் ஆண்​டாள், ரெங்கமன்னார்.

சிறப்பு அலங்​காரத்​தில் ஆண்​டாள், ரெங்கமன்னார்.

Updated on
1 min read

ஸ்ரீவில்​லிப்புத்​தூர்: 108 வைணவ திவ்ய தேசங்​களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்​லிப்புத்​தூர் ஆண்டாள் கோயில், பன்​னிரு ஆழ்​வார்​களில் பெரி​யாழ்​வார், ஆண்டாள் அவதரித்த சிறப்​புக்​குரியது.

ஸ்ரீவில்​லிப்புத்​தூரில் பெரி​யாழ்​வாரின் மகளாக வளர்ந்த ஆண்டாள், மார்​கழி மாதத்​தில் திருப்​பாவை பாடி, பாவை நோன்பு இருந்து ரெங்​கமன்​னாரை மணந்​தார் என்​பது ஸ்தல வரலாறு.

மார்​கழி மாதத்​தில் திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் உட்பட அனைத்து பெரு​மாள் கோயில்​களி​லும் ஆண்டாள் பாடிய திருப்​பாவைப் பாடல்​கள் தமிழில் பாடப்​படு​கின்​றன. ஆண்டாள் கோயி​லில் மார்​கழி மாதம் முழு​வதும் சிறப்பு வழி​பாடு நடை​பெறும்.

மார்​கழி மாதத்​தின் முதல் நாளான நாளை (டிச. 16) காலை 10 மணிக்கு ஆண்​டாளுக்கு தங்க இலைகளால், திருப்​பாவை பாடல்​கள் நெய்​யப்​பட்ட 18 கஜம் திருப்​பாவை பட்டு சாற்​றப்​பட்டு சிறப்பு பூஜை நடை​பெறுகிறது.

தினசரி காலை 4 மணிக்கு நடை திறக்​கப்​பட்​டு, 4.30 மணிக்கு திருப்​பள்ளி எழுச்​சி​யும், திருப்​பாவை கோஷ்டி​யும் நடை​பெறும்.

மார்​கழி மாதத்​தில் பச்சை பரப்​புதல், பகல்​பத்​து, ராப்​பத்து உற்​சவம், வைகுண்ட ஏகாதசி, எண்​ணெய் காப்பு உற்​சவம், கூடார​வல்லி உற்​சவம் என தினசரி பல்​வேறு உற்​சவங்​கள் நடை​பெறுகின்​றன. இதற்​கான ஏற்​பாடு​களை கோயில் நிர்​வாகி​கள் செய்து வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>சிறப்பு அலங்​காரத்​தில் ஆண்​டாள், ரெங்கமன்னார்.</p></div>
கடல் அரிப்பால் 6 அடி ஆழத்துக்கு பள்ளம்: திருச்செந்தூரில் புனித நீராடுவதில் பக்தர்கள் சிரமம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in