வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணியில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற அருட்தந்தைகள்.

வேளாங்கண்ணியில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற அருட்தந்தைகள்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: நாகை மாவட்​டம் வேளாங்​கண்​ணி​யில் உள்ள பிரசித்​திபெற்ற புனித ஆரோக்​கிய அன்னை பேரால​யத்​தில் புத்​தாண்டு பிறப்​பையொட்டி நேற்று முன்​தினம் இரவு 11 மணி​யள​வில் விடியற்​காலை விண்​மீன் ஆலயத்​தில் தஞ்சை மறை​மாவட்ட ஆயர் சகாய​ராஜ் தலை​மை​யில் சிறப்பு திருப்​பலி நடை​பெற்​றது.

தொடர்ந்​து, பேரால​யத்​தில் நேற்று காலை முதல் தமிழ், ஆங்​கிலம், இந்​தி, தெலுங்​கு, கொங்​கணி உள்​ளிட்ட மொழி களில் திருப்​பலி மற்​றும் புத்​தாண்டு சிறப்பு பிரார்த்​தனை​கள் நடை​பெற்​றன. இதில், பல்​வேறு மாநிலங்​கள் மட்​டுமின்றி வெளி​நாடு​களில் இருந்​தும் வந்​திருந்த ஆயிரக்​கணக்​கானோர் கலந்​து​கொண்​டனர். பேராலய அதிபர் இருதய​ராஜ், பங்​குத் தந்தை அற்​புத​ராஜ், நிர்​வாக தந்தை பரிசுத்​த​ராஜ் உள்​ளிட்​டோர் பிரார்த்​தனைக்​கான ஏற்​பாடு​களை செய்​திருந்​தனர். மேலும், பேராலய வளாகம், கடற்​கரை, மாதா குளம் உட்பட வேளாங்​கண்ணி முழு​வதும் பொது​மக்​கள் குவிந்​திருந்​தனர்.

<div class="paragraphs"><p>வேளாங்கண்ணியில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற அருட்தந்தைகள்.</p></div>
பொங்கலுக்கு பின் கூட்டணி நிலை குறித்து உறுதியான தகவல் வெளியாகும்: நயினார் நாகேந்திரன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in